பிளான் பண்ணி பண்ண பிரேக் – அப் டிராமா.. எல்லாம் எதற்காகத் தெரியுமா

சென்னை: நம்பர் நடிகைக்கும் அந்த ரெளடி இயக்குநருக்கும் இடையே பிரேக் ஆகி விட்டதாக சில நாட்களுக்கு முன்பு அனைத்து மீடியாக்களும் பரபரத்தன. ஆனால், அது எல்லாமே அவங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி பண்ண டிராமாதானாம்.

விரைவில் வெளியாகவுள்ள அந்த உச்ச நடிகரின் படத்திற்கான மறைமுக புரொமோஷன் தானாம் இந்த பிரேக் - அப் டிராமா என கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு பல சிறப்பு விடுமுறை கொண்டாட்டங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், புத்தாண்டில் மட்டும் அந்த நம்பர் நடிகை தனியாக இருக்கும் புகைப்படம் வெளியானது தான் மீடியாக்களுக்கு தீனியாக அமைந்தது.

ஆனால், அந்த நம்பர் நடிகை போட்ட மாஸ்டர் பிளான் சரியான முறையில் ஒர்க்கவுட் ஆகியுள்ளது. இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி வெளியானால், மீடியாக்களில் அந்த நம்பர் நடிகை பற்றிய பேச்சுக்கள் வைரலாகும் என்ற நோக்கத்திலேயே இந்த டிராமா நடந்தேறியதாம்.