பொருளாதார மந்தநிலை: மீளாத் துயரில் இந்தியா!

2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.


கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. குறிப்பாக 2019-20 நிதியாண்டு தொடங்கியது முதலே பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.


ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி, அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 4.5 சதவீதமாகச் சரிந்தது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிக மோசமான வளர்ச்சியாகும். அக்டோபர் - டிசம்பர் காலாண்டிலும் மந்தமான வளர்ச்சியே இருக்கும் என்று பல்வேறு மதிப்பீடுகள் கூறிவருகின்றன.


2019-20 நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியைக் கூட இந்தியா கொண்டிருக்காது என்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், எஸ்.பி.ஐ. ரிசர்ச் உள்ளிட்ட உள்நாட்டு ஆய்வு நிறுவனங்களும்


மதிப்பிட்டுள்ளன. இதுபோன்ற சூழலில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.